Connect with us

Cinemapettai

தனுஷ் மீது செம கடுப்பில் கார்த்திக் நரேன்.. நம்ப வைத்து ஏமாற்றி விடுவாரோ என கவலை!

dhanush-karthik-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் மீது செம கடுப்பில் கார்த்திக் நரேன்.. நம்ப வைத்து ஏமாற்றி விடுவாரோ என கவலை!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஹீரோக்களில் தனுஷ் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். தமிழ், ஹிந்தி என தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

ஜகமே தந்திரம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 95% படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ள படம் கர்ணன்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சேர்த்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக கார்த்திக் நரேன் தற்போது கேரளாவில் உள்ள முக்கிய இயக்குனர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். கார்த்திக் நரேன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தனுஷ் அவரின் மாபியா படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டாராம்.

இந்நிலையில் உடனடியாக இயக்குனரை மாற்றும் வேலையில் இறங்கி விட்டாராம். அதற்காக சமீபத்தில் ஜெயம் ரவிக்கு கோமாளி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் என்பவரிடம் ஒரு கதை கேட்டுள்ளாராம்.

ஒருவேளை அந்த கதை செட்டாகும் நிலையில் கார்த்திக் நரேனை கழட்டி விட விட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top