Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் படத்துக்கு விடிவுகாலம் எப்பொழுது.. ட்விட்டரில் கவுதம் மேனனிடம் கேள்வி கேட்கும் இளம் இயக்குனர்.. ச்ச பாவம் பாஸ் இவர்
துருவங்கள் 16 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அருண்விஜய்யின் மாஃபியா விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
பத்ரி கஸ்தூரி, கவுதம் மேனன் தயரிப்பில் நரேனின் இரண்டாவது படமாக ரெடியானதே நரகாசூரன். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா ஆகியோர் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர். பணப்பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போனது. முன்பே கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ட்விட்டரில் ஒருவரை ஒருவர் குறை கூறி ஸ்டேட்டஸ் பதிவிட்டனர்.
இந்நிலையில் கவுதம் மேனனின் அடுத்தடுத்த மூன்று படங்கள் ரிலீசாகிறது. ஐசரி கணேஷ் உதவியால் எனை நோக்கி பாயும் தோட்டா இம்மாதம் ரிலீஸ். அடுத்தத்த்தாக வருண் நடிப்பில் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஆக்ஷன் படம் ஜோஷ்வா ஷூட்டிங்கும் நடந்து வருகின்றது. அடுத்த 60 நாட்கள் துருவநட்சத்திரம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடக்கும் , ரிலீஸ் நோக்கி பயணத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஜான் உங்களை சந்திப்பான் எனவும் ஸ்டேட்டஸ் தட்டினார்.
அந்த ஸ்டேட்டஸுக்கு பதிலாக தான் தன் ஆதங்கத்தை கூடியுள்ளார் கார்த்திக் நரேன். “நரகாசூரன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், அதனை பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.” என கேட்டுள்ளார்.
Some clarity on when this is gonna see the light of the day will be really helpful sir. And yes, this film is very very close to my heart! pic.twitter.com/1eFoEFub3u
— Karthick Naren (@karthicknaren_M) November 3, 2019
மேனனின் ரிப்ளை என்னவாக இருக்கும் என தான் பலரும் வைட்டிங்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
