Dhuruvangal Pathinaaru-Karthik Narenதுருவங்கள் 16  படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் தன் அடுத்த படத்திற்கு நரகாசூரன் என்று பெயர் வைத்ததும், அதை கவுதம் மேனன் னுடன் சேர்ந்து தயாரிப்பது நாம் அறிந்ததே.

அவர் முன்பு தன் ட்விட்டரில் தெரிவித்தது போல், இன்று செப்டம்பர் 16 ஊட்டியில் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்.

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத் மிக்கா நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியிடப் போகிறார்கள். இதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா படம் தான்.

சினிமாபேட்டை கிசு கிசு:

தற்பொழுது அரவிந்த் சாமி வேறு பட ஷூட்டிங்கில் இருப்பதால், அவர் இல்லாத மற்ற சுசீன்களை எடுக்கிறது படக்குழு.

ரான் ஏதன் யோஹன் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது.