Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை 1.5 கோடி நஷ்டத்தில் கார்த்தியின் திரைப்படம்.! தயாரிப்பாளர் தலையில் இடி
Published on
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெற்றி அடைந்தது அனைவரும் தெரிந்ததே.
இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் தேவ், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார், படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து வந்தது அங்கு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் படப்பிடிப்பில் இருந்து 140 பேருக்கு மேல் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் சாப்பிட உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் மேலும் இதனால் தயாரிப்பாளருக்கு ஒன்றரை கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
