வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இவர் நம்ம லிஸ்டலையே இல்லையே.. தனுஷ் மீது ஒட்டுமொத்த சினிமா துறையே வன்மத்தில் தான் இருக்கு

நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை பற்றி எல்லோரும் பேசி வருகின்றனர். மறுபக்கம், தனுஷுக்கு ஆதரவாக ஒரு சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு சிலரும் இருக்க, சினிமா துறையில், பெரும்பாலானோர் நயன்தாராவுக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

முக்கியமாக நடிகைகள் தொடர்ந்து அவரது பதிவுக்கு லைக் போட்டு, ஸ்டோரி போட்டு ஆதரவு தெரிவிப்பதை எல்லாம் பார்க்கும்போது, தனுஷ் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு.. அதுவும் இவருடன், பணியாற்றிய நடிகைகள் ஆதரவு தெரிவிப்பதையெல்லாம் பார்க்கும்போது, இவர் எல்லோர் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடி இருப்பார் போலையே என்ற சந்தேகமும் வருகிறது.

இவர் நம்ம லிஸ்டலையே இல்லையே

என்ன தான் நயன்தாரா தனது கோவத்தை போஸ்ட் போட்டு வெளிப்படுத்தி இருந்தாலும், அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள், ஏற்றுக்கொள்ள முடியாதவையாக தான் உள்ளது. தனிப்பட்ட முரையில் இவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், தராதரம் இல்லாமல் இப்படியா பேசுவது என்று பலர் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம், தனுஷ்-க்கு இது தேவை தான்.. எத்தனை பேர் வாழ்க்கையை கெடுத்திருக்கிறார்… என்ற கருத்துக்களும் வருகிறது.

இப்படி இருக்க, நடிகைகள், நஸ்ரியா, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன், ரியா சிபு, காயத்ரி சங்கர், அதிதி பாலன், மஞ்சிமா மோகன் பார்வதி திருவொத்து, ஐஸ்வர்யா லட்சுமி, கவுரி கிஷன் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமாக நஸ்ரியா ஏற்கனவே தனுஷ் மீது ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இப்படி இருக்க, நயன்தாராவின் பதிவை மேற்கோள்கட்டி, “நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தைரியம்” என்று சொல்லி, தனுஷ், நயன்தாரா உடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரும் பாராட்டி பதிவு போட்டிருக்கிறார். இவர் தனுஷின் உயிர் நண்பர் ஆச்சே, எப்படி இவர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று நெட்டிசன்கள் தற்போது பேசி வருகின்றனர்.

- Advertisement -

Trending News