சில பல வருடங்கலாகவே, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பலர் முயற்சி எடுத்தும் முடியவில்லை.

மூன்றே படங்கள் எடுத்திருந்தாலும் , ட்ரெண்டியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பெயர் எடுத்தவர் திரு . தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று இவருடைய  மூன்று படத்திலும் விஷால் தான் ஹீரோ. இயக்குனரின்  புதுப் பட அறிவிப்பு வந்தது. இப்படத்தில் கார்த்திக், மற்றும் கௌதம் நடிப்பது உறுதியானது.

அதிகம் படித்தவை:  விஜய் - பிரபு தேவா மோதல் உறுதி?

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

மிஸ்டர் சந்திரமௌலி

திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கேசன்ட்ரா, வரலட்சுமி சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு

அதிகம் படித்தவை:  அந்த கார யாரு வச்சிருக்கா? ரஜினி காந்தின் காலா காருக்கு இவ்வளவு மவுசா

இந்நிலையில் இப்படத்தின் பூஜையும், படப்பிடிப்பு துவக்கமும் நேற்று காலை சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடைபெற்றது.

மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படம். அரசு அதிகாரியாக பணி புரியும் காத்திக், பாக்சாராக வரும் கௌதம்  கார்த்திக். ஒரே கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையை தொடர்ந்து பாண்டிச்சேரியிலும் நடைபெறவிருக்கிறது.