‘பலே வெள்ளையத் தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘கொடிவீரன்’. இது தவிர கைவசம் இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் உள்ளது. இதில் ‘கொடிவீரன்’ படத்தை முத்தையா இயக்குகிறார்.

ஏற்கெனவே, சசி – முத்தையா காம்போவில் ரிலீஸான ‘குட்டிப்புலி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கொடிவீரன்’-யில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘சாட்டை’ புகழ் மகிமா நம்பியார் டூயட் பாடி ஆடியுள்ளார்.

sasikumar
sasikumar

மற்றுமொரு நாயகியாக ‘கந்தகோட்டை’ பூர்ணா நடித்துள்ளார். மேலும், ‘மைனா’ விதார்த், சனுஷா, பாலசரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சசிகுமாருக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடங்களில் பசுபதி, தயாரிப்பாளர் இந்தர் குமார் நடித்துள்ளனர். இதனை சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து வருகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kodiveeran

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர், மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில், கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

karthik

சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு, வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீரன் திருமாறன் என்ற போலீஸ் கெட்டப்பில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.