நவரச நாயகனை வளர்த்துவிட்ட சுந்தர் சி.. இவர்கள் காம்போவில் பட்டைய கிளப்பிய 6 படங்கள்!

அந்த காலகட்டத்தில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். தற்போது கார்த்திக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் இவருடைய பெரும்பாலான படங்கள், நகைச்சுவை படங்களாக இருக்கும். அப்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருந்த சுந்தர் சி இக்கு கார்த்திக் நிறைய படங்கள் தந்துள்ளார். அவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய ஆறு காமெடி படங்களை பார்க்கலாம்.

உள்ளத்தை அள்ளித்தா: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்தில் கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் நகைச்சுவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றது.

மேட்டுக்குடி: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ஜெமினி கணேசன், கவுண்டமணி, நக்மா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மேட்டுக்குடி. முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதையை சுந்தர் சி எழுதியிருந்தார். இப்படத்திற்கு சிற்பி இசை அமைத்திருந்தார்.

உனக்காக எல்லாம் உனக்காக: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, விவேக், வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உனக்காக எல்லாம் உனக்காக. உள்ளத்தை அள்ளித்தா படத்திற்குப் பிறகு கார்த்திக்கும், ரம்பாவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படம் இது .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கண்ணன் வருவான்: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், திவ்யா உன்னி, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி, மயில்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணன் வருவான். இப்படத்திற்கு சிற்பி இசை அமைத்திருந்தார். கண்ணன் வருவான் படம் வெளியான போது இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகவும் பிரபலமானது.

உள்ளம் கொள்ளை போகுதே: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், பிரபு தேவா, அஞ்சலா ஜவேரி, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளம் கொள்ளை போகுதே. இப்படத்தில் பிரபுதேவா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கார்த்திக் சில காட்சிகளில் மட்டும் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் பெற்றார். சுந்தர் சி யின் வெற்றிப் படங்களில் உள்ளம் கொள்ளை போகுதே படமும் ஒன்றாகும்.

அழகான நாட்கள்: சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, மும்தாஜ், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகான நாட்கள். சுந்தர் சியின் இந்த ஜோடிகள் மூன்றாவது முறையாக அழகான நாட்கள் படத்தின் மூலம் இணைந்தனர். கார்த்திக் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அழகான நாட்கள் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

Next Story

- Advertisement -