ஒரே கதையில் நவரசநாயகன் நடித்த 2 படம்.. விருப்பமே இல்லாமல் நடித்து விருதுகளை வாங்கிய கார்த்திக்

இயக்குனர் பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக். இவருக்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த காலத்திலேயே இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். ரஜினி-கமலுக்கு இணையாக வெற்றிப்படங்களை கொடுத்த நவரச நாயகன் அஜித் மற்றும் விஜய் டாப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் போதே இவர் டாப் ஸ்டாராக இருந்தார்.

தெய்வ வாக்கு, சின்னக் கண்ணம்மா, பொன்னுமணி, லக்கி மேன், நந்தவனத் தேரு , தொட்டா சிணுங்கி, கிழக்கு முகம், உள்ளத்தை அள்ளித்தா, பூவரசன், மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை என பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் வில்லனாகவும் அசத்தி இருந்தார்.

Also Read: ரெடியான உள்ளத்தை அள்ளித்தா பார்ட்-2 கதை.. எதிர்பாராமல் சுந்தர்.சி எடுத்த முடிவு

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கார்த்திக் ஒரே மாதிரி கதை கொண்ட இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். ஒரே மாதிரி கதை என்பதால் அவர் அந்த இரண்டாவது படத்தில் நடிக்க ரொம்பவே யோசித்து இருக்கிறார். படத்தை ஒப்புக்கொண்ட போதும் விருப்பமே இல்லாமல் படம் முழுக்க நடித்து இருக்கிறார்.

இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் நந்தவனத் தேரு. இந்த படத்தில் கார்த்திக், ஸ்ரீநிதி, ஆனந்த்ராஜ், தேவன், ஜனகராஜ், விவேக், வடிவேலு, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கார்த்திக் அனாதையாகவும், முழு நேர திருடனாகவும் இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கதாநாயகியுடன் நட்பாகும் கார்த்திக் அவருக்காக தன்னுடைய வாழ்க்கைப்பாதையை மாற்றிக்கொள்கிறார்.

Also Read: நவரச நாயகன் கார்த்திக் பாடிய 7 பாடல்கள்.. 90களில் பட்டையை கிளப்பிய சாங்

இதே கதைக்களத்துடன் 1998ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த படத்திலும் கார்த்திக் அனாதையாகவும், முழு நேர திருடனாகவும் வருவார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜாவுடன் நட்பாகும் கார்த்திக் பின்பு ரோஜாவுக்காக தன்னுடைய வாழ்க்கையை மாற்றி கொள்வார். இந்த படமும் நந்தவன தேரு கதையை ஒத்து இருப்பதால், கார்த்திக்குக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பமே இல்லாமல் நடித்தாராம்.

இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். கார்த்திக் விருப்பமே இல்லாமல் நடித்தாலும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடித்ததற்காக கார்த்திக்குக்கு மாநில அரசின் சிறந்த கதாநாயகனுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் வழங்கப்பட்டது.

Also Read: நாங்க அதிகம் வாங்கிய சம்பளம் இவ்வளவுதான்.. வெளிப்படையாய் சொன்ன பிரபு, கார்த்திக்

Next Story

- Advertisement -