வெற்றிப்பட இயக்குனருக்கே இப்படி ஒரு நிலைமையா.. கைவிடப்பட்ட விஷால் படம்

விஷால் தற்போது நடிகர் சங்க வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். பல வருடங்களாக இழுத்து கொண்டே இருந்த நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்து விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனால் அவர் நடிகர் சங்கம் தொடர்பாக அடுத்தகட்ட வேலைகளை பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அதாவது அவர் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வருவதில்லை என்ற ஒரு கருத்தும் திரையுலகில் நிலவி வருகிறது. இப்போது அவர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க இருந்த படம் ட்ராப் ஆகி இருக்கிறது. கார்த்திக் தங்கவேல், ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

அந்த சமயத்தில் ஜெயம்ரவி ஒரு வெற்றி படம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது இந்த அடங்க மறு திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து கார்த்திக் தங்கவேல் விஷாலுடன் இணைந்து படம் பண்ணுவதற்காக கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் தன் ஆபீஸில் இந்த கதையை அவர் ரெடி பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக அறிவித்துவிட்டார்.

விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையில் ஏதோ பெரிய பிரச்சினை இருப்பதால் தான் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தற்போது திரையுலகில் பேசி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு நாள் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்.