fbpx
Connect with us

Cinemapettai

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஊமைப்படம்

karthik-subburaj

News | செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஊமைப்படம்

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்.

தற்போது இவர் கமல் நடித்த பேசும் படம் பாணியில் படத்தில் யாருமே பேசாத ஒரு ஊமை படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு மெர்குரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் நெகடிவ் காரக்டரில் பிரபு தேவா நடிக்கிறார். இவரை தவிர சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பிசியாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

karthik subburajபடத்தில் இருக்கும் ஒவ்வொரு வித்யாசமான கதாபாத்திரமும் அனைவராலும் பேசப்படும், ஆனால் படத்தில் நடித்திருக்கும் யாரும் பேசப்போவதில்லை என்று இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top