நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு படம் நடித்து, அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு நடிகர் சங்க கட்டிடம் கட்டுவோம்’ என்று நடிகர் சங்கத் தேர்தலின்போது கார்த்தியும், விஷாலும் அறிவித்தார்கள். அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்கப் போகிறார்  என்றெல்லாம் அப்போது செய்திகள் வெளியாகின.
ஆனால், தேர்தலில் ஜெயித்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. அந்தப் படத்தைப் பற்றிய ஒரு அறிவிப்பையும் காணோம். அதற்குப் பதில், ’நாங்கள் இருவரும் ஆளுக்கு 10 கோடி தருகிறோம்’ என்றனர். தாங்கள் நடிக்கும் படங்களின் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தருவதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, பிரபுதேவா இயக்கும் ‘கறுப்பு ராஜா  வெள்ளை ராஜா’ படத்தில் இருவரும் நடிப்பதால், இந்தப் படத்தில் இருந்து அதைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்யாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவருக்கான காட்சிகள் குறைவாக இருக்குமாம். அதற்காக, கெஸ்ட் ரோல் அளவுக்கும் இருக்காதாம். இந்தப் படத்தில் தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை, அப்படியே நடிகர் சங்க கட்டிடம் கட்ட கொடுத்துவிடச் சொல்லிவிட்டாராம் ஆர்யா. இந்தப் படத்தை, ஐசரி கணேஷ்  தயாரிக்கிறார்.
அதிகம் படித்தவை:  களைகட்டும் பிக்பாஸ் சீசன் - 2... அரசியல், நையாண்டி, காமெடிக்கு கேரண்டி