உச்ச நடிகர்களை ஓரங்கட்டிய கார்த்தி.. சத்தமில்லாமல் ஹாட்ரிக் வெற்றி அடித்த மகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் எப்போதுமே தீபாவளிக்கு படங்கள் வருவது என்பது சிறப்பான விஷயம். அது பல காலமாகவே அந்த மகிழ்ச்சி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அப்போதெல்லாம் தீபாவளி என்றாலே உச்ச நட்சத்திரங்கள் படங்கள் கண்டிப்பாக வரும் என்பது உண்மை. காரணம் தீபாவளிக்கு ஆகவே படங்களை வேகமாக முடித்து வெளியிட ஆசைப்படுவார்கள் நடிகர்கள்.

இப்போதெல்லாம் அப்படியில்லை இந்த படம் முடிக்க படுகிறதோ அந்த படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த வருடத்தில் தோல்வியை நோக்கி சென்ற தனுஷ் தொடர் வெற்றிகளைக் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றி கொடுக்க முயன்று கடைசியில் பிரின்ஸ் படத்தின் மூலம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

Also Read : ஷங்கரை மிஞ்சிய பிரம்மாண்டம்.. மொத்த கெட்டப்புகளையும் மறைத்து வெளியிட்ட சர்தார் படக்குழு

இந்த தீபாவளி கார்த்தியின் தீபாவளியாக பார்க்கப்படுகிறது காரணம் சர்தார் திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதன் மூலம் கார்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார். முதல் வெற்றி விருமன் படத்தில் நடித்து அந்தப் படத்தை வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். பின்னர் வந்த பொன்னியின் செல்வனும் கார்த்திக்கு முக்கியமாக வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தீபாவளி தினத்தன்று வெளியான சர்தார் திரைப்படமும் வெற்றியடைந்ததால் கார்த்திக் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார். இந்த வருடம் கார்த்திக்கின் வருடம் ஆனது என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். சத்தமில்லாமல் கார்த்திக் பல வருடங்கள் நிறைய வெற்றிகளை கொடுத்து வருகிறார் அதே போல் இந்த வருடமும் வெற்றியை கொடுத்து அனைத்து நடிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

Also Read : வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இதேபோல் அடுத்து ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் சிம்பு அவரின் 10 தல படம் டிசம்பர் மாதம் வெளியானால் அந்தப் படம் வெற்றியடைந்தால் இவருக்கும் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். இந்த தீபாவளி அன்று அஜித்தின் திரைப்படம் வரும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றத்தில் அமைந்தது.

அடுத்த வருடம் தீபாவளி கண்டிப்பாக கலைகட்டும் காரணம் கமல் நடித்த இந்தியன் 2 மற்றும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படங்கள் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள தீபாவளி போல் அடுத்த வருட தீபாவளி அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Also Read : ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்.. அடிமாட்டு விலைக்கு பிசினஸ் பேசும் ஓடிடி நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்