புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

6 இயக்குனர்களை 2வது ஆட்டத்தில் சிக்ஸர் அடிக்க வைத்த கார்த்தி.. லோகேஷ் கனகராஜின் அடையாளமான கைதி படம்

Actor Karthi: நடிகர் கார்த்தி எப்போதுமே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் ஆன நடிகர் தான். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பது போல் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய சிறந்த படங்களின் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விடுவார்.

அப்படி ஒரு லிஸ்டில் சேர்ந்த படம் தான் நேற்று ரிலீசான மெய்யழகன். இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கும் சமயத்தில் தான் கார்த்தியை பற்றி ஒரு சுவாரசியமான விஷயம் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதாவது இரண்டாவது படத்தை இயக்கும் இயக்குனர்கள் கார்த்தி உடன் கைகோர்த்தால் கண்டிப்பாக அது சூப்பர் ஹிட் அடித்து விடுமாம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஆறு இயக்குனர்களை சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி பார்க்கலாம்.

சிக்ஸர் அடிக்க வைத்த கார்த்தி

சுசீந்திரன்: வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்தான் இயக்குனர் சுசீந்திரன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படமான நான் மகான் அல்ல படத்திற்காக நடிகர் கார்த்தி உடன் கைகோர்த்தார். முழுக்க முழுக்க கிராமத்துக் கதையை இயக்கி இருந்த சுசீந்திரனுக்கு இது ஒரு வித்தியாசமான கதைக்களம் என்றாலும், இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

பா.ரஞ்சித்: இயக்குனர் ரஞ்சித் முதன் முதலில் இயக்கிய அட்டகத்தி படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அடுத்த படமான மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்தார். இந்த மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பே கிடைத்தது.

முத்தையா: நடிகர் சசிகுமார் மற்றும் லட்சுமிமேனன் கூட்டணியில் வெளியான படம் தான் குட்டி புலி. இந்த படம் ஒரு டீசன்ட்டான வெற்றியை இயக்குனர் முத்தையாவுக்கு கொடுத்தது. அதை தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கொம்பன் படம் தான் பட்டி தொட்டி எங்கும் முத்தையாவை பரீட்சையம் ஆக்கியது.

ஹெச்.வினோத்: இயக்குனர் எச் வினோத் என்றால் இப்போதைக்கு, தளபதி விஜயின் முகம் தான் நமக்கு ஞாபகம் வரும். விஜயின் கடைசி படத்தை இயக்கும் இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்போது இவர் பெற்றிருக்கிறார். சதுரங்க வேட்டை என்ற வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வினோத் தன்னுடைய இரண்டாவது படமான தீரன் அதிகாரம் ஒன்றின் மூலம் கார்த்திவுடன் இணைந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ்: மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் இயக்கிய பெரிய ஹீரோ என்றால் அது கார்த்தி தான். இவர்களது கூட்டணியில் வெளியான கைதி படம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. கைதி ரிலீசுக்கு பிறகு இன்று வரை லோகேஷ் கனகராஜுக்கு நின்று பார்க்க கூட நேரமில்லாத அளவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

பிரேம்குமார்: 90களின் காலகட்டத்தில் இருந்த அழகான காதலை நம் கண் முன்னாடி காட்டி மனதை வருடியவர்தான் 96 பட இயக்குனர் பிரேம்குமார். இவருடைய இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்திருக்கும் படம் தான் மெய்யழகன். ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களிலேயே இந்த படம் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -spot_img

Trending News