சுல்தான் படுத்திய பாடு.. கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு கார்த்தி போட்ட கட்டளை

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் படத்திற்கு பதிலாக முழுக்க முழுக்க தெலுங்கு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற கருத்துக்கள் தான் அதிக அளவில் பரவி வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான்.

மாஸ் கமர்சியல் படமாக வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற்றதே தவிர விமர்சனங்களை பெறவில்லை. மேலும் தொடர்ந்து சுல்தான் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையெல்லாம் மீறி சுல்தான் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் கார்த்தியின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வசூலை குவித்ததாகும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இருந்தாலும் கார்த்தி இனிமேல் தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை கவனமுடன் தேர்வு செய்ய ஒரு ஐடியா ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது கதை சொல்ல வரும் இயக்குனர்கள் 3 மணி நேரமானாலும் பரவாயில்லை, முழுவதுமாக திரைக்கதையுடன் கூற வேண்டுமாம்.

கதை சொன்னபோது நன்றாக இருந்த சுல்தான் திரைப்படம் திரைக்கதையாக மாறி படமாக பார்க்கும்போது கொஞ்சம் சொதப்பலாக இருந்ததாக கார்த்தி உணர்ந்துள்ளாராம். இதன் காரணமாகவே தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான கதைத் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஒரு காலத்தில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த கார்த்தி ஏன் சுல்தான் போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெருத்த கேள்வியாக உள்ளது.

sulthan-cinemapettai-01
sulthan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்