karthi-actorகார்த்தி நடித்த ‘தோழா’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘காஷ்மோரா’ கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய்பல்லவி நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான நடிகர்!

இந்நிலையில் மேற்கண்ட இரண்டு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி, பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. பிரபுதேவா கூறிய ஒன்லைன் கதை கார்த்திக்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபுதேவா ஏற்கனவே விஜய் நடித்த ‘போக்கிரி’, ‘வில்லு’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.