fbpx
Connect with us

தல- தளபதி பற்றி, டைரக்டர் கார்த்தி, மெட்ராஸ் பார்ட் 2, பிடித்த படம்- தீரன் கார்த்தி சொன்ன பதில் இது தான்!

News / செய்திகள்

தல- தளபதி பற்றி, டைரக்டர் கார்த்தி, மெட்ராஸ் பார்ட் 2, பிடித்த படம்- தீரன் கார்த்தி சொன்ன பதில் இது தான்!

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் கடந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வினோத் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ராகுல் ப்ரீத் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள், காவல் துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் லைவ் சாட் வருவதாக கார்த்தி அறிவித்தார்.

#AskTheeran என்ற ஹாஸ் டேக் இட்டு தங்கள் கேள்வியை கேட்குமாறு கூறினார். பல கேள்விகளுக்கு மிக அழகான மற்றும் அம்சமான பதில் அளித்தார் கார்த்தி.

இயக்குனர் கார்த்தி ஆவீர்களா ?

நான் சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதிய பிறகு, ஆனால் அதற்கு ரொம்ப நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.

சூர்யாவை வைத்து படம் இயக்குவீர்களா ?

நான் உதவி இயக்குனராக இருந்த பொழுது அண்ணன் அவர்களுக்காக கதை எழுதினேன். பார்க்கலாம். ஒரு நாள் என் ஸ்கிரிப்ட் அவருக்கு பிடித்துப்போனால், அவரை இயக்கம் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.

தளபதி விஜய் பற்றி


எனக்கு விஜய் சார், அண்ணனுடன் லயோலா காலேஜில் இருக்கும் பொழுது இருந்தே தெரியும். சிம்பிள் ஆன மனிதர்.

அஜித் பற்றி கூறுங்கள்

அஜித் சார் அன்பான ஜென்டில்மேன். அவரை ஒரு முறை மீட் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு அவரை இன்னும் அதிகமாக பிடிக்கும்.

நடித்த படத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

மெட்ராஸ் இரண்டாம் பாகம் வருமா ?

அதை பற்றி நாங்கள் முடிவு செய்ய வில்லை. ஆனால் நானும் ரஞ்சித்தும் இணைந்து படம் பண்ண அப்பொழுதே முடிவு செய்தோம்.

Aval

Aval

சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது ?

விக்ரம் வேதா, மீசையை முறுக்கு (நானும் என்ஜினீயர்). அவள் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

“இந்த வீக் எண்ட் போலாமா மச்சி. நீ அவள் பாரு, நானும் மிலிண்ட் ராவுடன் தீரன் பார்க்கிறேன். அதன் பின்பு ட்ரீட். என்ன நான் சொல்றது .”

ராகுல் ப்ரீத் பற்றி

ரொம்ப பிடித்திருந்தது. அழகாக அந்த கதாபாத்திரம் ஆக மாறினார். எப்பொழுதும் நேரத்துக்கு வந்து விடுவார்.

பிடித்த ரஹ்மான் சார் ஆல்பம் எது ?

திருடா திருடா

theeran karthi

தீரன் தான் நீங்கள் மிகவும் கஷ்டப் பட்டு நடித்த படமா ?


இல்லை ஆயிரத்தில் ஒருவன்.

உங்களுடன் பேசியது நன்றாக இருந்தது. சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடிந்தது. மீண்டும் சிந்திப்போம் என்று கூறி விடை பெற்றார் கார்த்தி.

வாழ்த்துக்கள் தீரன் கார்த்தி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top