Connect with us
Cinemapettai

Cinemapettai

karthi yash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தை புகழ்ந்து தள்ளிய கார்த்திக்.. இதுக்கு அவருக்கு தகுதியே இல்லை

கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

பான் இந்திய படமாக வெளியான கே ஜி எஃப்2 உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. பல பிரபலங்களும் இப்படத்தைப் பற்றி தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு நடிகர் கார்த்தியும் கேஜிஎஃப்2 படத்தைப் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுயிருந்தார்.

அதில் ஏதாவது மிகப்பெரிதாக கற்பனை செய்து அதை முழுமையான பாணியுடன் வழங்குவது மிகப் பெரிய கைதட்டலுக்கு அழைப்பு விடுக்கிறது. அவ்வாறு காட்சிகள், வசனம், சண்டைக்காட்சிகள் என அனைத்து மகத்துவத்தையும் உயர்த்தி ஒரு தாயின் கனவு சக்தியை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மேலும் கேஜிஎஃப் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என கார்த்தி பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலரும் கார்த்தியை சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும் கேஜிஎஃப் படத்தை கார்த்தியின் உறவினரான எஸ்ஆர் பிரபு தான் படத்தை வெளியிட்டுள்ளார்.

கேஜிஎஃப் படத்தை புரமோஷன் செய்வதற்காக கார்த்தி புகழ்ந்து பேசி உள்ளார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சொந்த மொழியில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்தைப் பற்றி எதுவும் பதிவிடாமல் வேறு மொழி படத்தை கார்த்தி புகழ்ந்து பேசி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேஜிஎஃப் படத்திற்கு முதல் நாள் முன்பு  வெளியான பீஸ்ட் படத்தை பார்க்கவில்லையா அல்லது அதை பற்றி குறிப்பிட விரும்பவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இத்தனைக்கும் கார்த்திக் திரைப்பட சங்க பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார் இப்படி இருக்கும் இவர் தமிழில் வெளியான பீஸ்ட் படத்தை பற்றி பேசாமல் கே ஜி எஃப் படத்தை மட்டும் பேசுகிறார் என குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இவர் எப்படி தமிழ் திரைப்பட சங்கத்தின் பொருளாளராக பதவி வைக்கிறார் இவருக்கு பதிலாக வேறு யாராவது பதவி வைக்கலாம் சொந்த மொழி படத்தைக் கொண்டாட ஒரு பொருளாளர் எப்படி நடிகர் சங்க பிரச்சனைகளை சமாளிப்பார் எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top