தமிழ் சினிமாவை பொறுத்தவரை போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களுக்கு  என்றுமே ரசிகர் கூட்டம் உண்டு. உண்மையில் நடந்த குற்றங்களை இன்ஸ்பிரஷன் ஆக எடுத்து கதை பண்ணப்பட்ட படங்கள்  நம் கோலிவுட்டில் ஏராளம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில்  வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது .

‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர்  சக்சஸ் மீட் கொண்டாடினார்கள். அப்பொழுது   பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது  . அதில் கார்த்தி  படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தன் நன்றிகளை  கூறினார். பின்னர் அதனை தொடர்ந்து கார்த்தி பேசிய விஷயங்கள் பின் வருமாறு ..

“எனக்கு இந்த படம் எப்படி அமைந்தது என்றால் அண்ணா சொன்னது மாதிரி தான். நீ உழைச்சுகிட்டே இரு. வெற்றி தோல்வி பத்தி கவலைப்பட கூடாது. உழைப்பு ஒரு சேவிங்ஸ் அக்கௌன்ட் மாதிரி. அது ஒரு இடத்துல போய் உட்காந்துகிட்டே இருக்கும். அதை நீ உடனே எடுக்க முடியாது. ஆனா ஒரு நாள் உனக்கு அது ரிட்டேர்ன் கொடுக்கும். இப்படி அண்ணா எப்பொழுதுமே சொல்லிகிட்டே இருப்பாங்க. அப்படி அண்ணா சொன்ன மாதிரி கிடைச்ச வெற்றி தான் தீரன்.

இப்பக்கூட ‘பருத்தி வீரன்’ படத்த கம்பேர் பண்ணி பேசுறாங்க. எனக்கு முதல் படமா அது அமைந்தது பெருமையா இருக்கு. ஆனா எத்தனை நாளைக்கு தான் பருத்திவீரனை பத்தியே பேசிகிட்டிருப்பது?  க‌ஷ்டப்பட்டு நடிச்சா அதுக்கான பலன் நிச்சயமா கிடைக்கும்ங்கிறதுக்கு இந்த ‘தீரன்’ உதாரணம். இந்த படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டேன். சொல்லப் போனா இதைவிட நான் கஷ்டப்பட்டு நடிச்ச படம் ‘காற்று வெளியிடை’. ஆனா அதுக்கான ரிசல்ட் உடனே கிடைக்கவில்லை. இருந்தாலும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சது.

karthi

இங்கு நான் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புறேன். தோல்விகளும் அவமானங்களும் வரும்போதுதான் நம் மைண்ட் ஸ்ட்ராங்கா அமையும். இது என்னோட அனுபவம். இதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் இன்று ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட அப்செட் ஆயிடுறாங்க. குழந்தைகளுக்கு ஐஃபோன், ஐ-பேட் வாங்கி கொடுக்கிறதை விட, தோல்வி வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதை சொல்லி கொடுக்கணும். தோல்விகளை நீங்க வாழ்க்கையில சந்திக்கணும்  என்று அவங்களுக்கு சொல்லி கொடுக்கணும். அப்பதான் அவங்க ஸ்ட்ராங்கா வளருவாங்க! அதே நேரம் பெற்றோர்கள் குழந்தைகளோட நிறைய நேரத்தை செலவழிக்கணும்.” என்றார்.