விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடித்திருக்கும் படம் சர்தார். இப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கி உள்ளார். மேலும் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சர்தார் படம் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. டாப் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகுவதால் இந்த இரு படத்திற்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
Also Read : ரோலக்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய டில்லி.. அதிரடி ஹீரோவுக்கு வில்லனாக போகும் கார்த்தி
இந்நிலையில் நேற்று சர்தார் படத்தை ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு சர்தார் படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். இப்படம் புதிய கோணத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

அதாவது இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் போல பல கெட்டப்புகளில் கார்த்தி வலம் வருகிறார். உளவாளியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சர்தார் படத்தின் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் சில இடங்களில் காதல் காட்சி இடம்பெற்றுள்ளது.
Also Read : சர்தார் படத்தின் கதையை உளறிய கார்த்தி.. போற போக்குல சிவகார்த்திகேயனை சீண்டி விட்ட சம்பவம்
இப்படத்தின் மூலம் நம்பர் ஒன் ட்ரெண்டிங்க்கு வர கார்த்தி உயிரை பனையம் வைத்துள்ளார். பத்த வச்சு பறக்க விட போறோம் என்று சரவெடியாய் சர்தார் படத்தில் வசனங்களும் தெறிக்கவிட்டுள்ளார் கார்த்தி. மேலும் கண்டிப்பாக கார்த்தி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.