Tamil Cinema News | சினிமா செய்திகள்
90 சதவீத படப்பிடிப்பு முடிந்தும் சிக்கலில் சிக்கிய கார்த்தி படம்.. குமுறும் தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனும் பிரபல நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அதன்பிறகு அவரது சினிமா மார்க்கெட் வேறு லெவலில் சென்றுகொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் சுல்தான். 90% படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அப்டேட் கூட வெளியிட முடியாமல் தடுமாறி வருகிறார் தயாரிப்பாளர்.
கைதி படத்தை தயாரித்த எஸ்ஆர் பிரபு தன்னுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரில் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார், இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக ரஷ்மிகா மந்தனா அடியெடுத்து வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டைனராக உருவாகியிருக்கும் இந்த படம் மே மாதத்தை நோக்கி குறி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த படம் எப்போது வெளியாகும் என்பது வெளியில் சொல்ல முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளார் தயாரிப்பாளர். தன்னுடைய சமூக வலைதளத்தில் சுல்தான் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என பார்த்தவரை கருத்து தெரிவித்துள்ளனர். கார்த்திக்கு மிகப்பெரிய குடும்ப ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sultan-update
