கைதி 2 பட ரகசியத்தை போட்டு உடைத்த லோகேஷ்.. ஒரே பட்ஜெட்டில் இரண்டு படமா.!

மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதற்கேற்ப லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் லோகேஷ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

கைதி படம் சாதாரண வெற்றியை பெறவில்லை பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. எந்தளவிற்கு என்றால் ஜப்பானில் வெளியாகும் அளவிற்கு கைதி படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட்டில் ரஜினி படங்கள் மட்டுமே ஜப்பானில் வெளியாகி வந்த நிலையில் தற்போது முதன் முறையாக கைதி படம் வெளியாக உள்ளது.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக சற்றும் தொய்வு இல்லாமல் இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகம் உருவாகும்படி தான் முடித்திருப்பார். அன்றில் இருந்தே இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

அதன்படி கைதி இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டார்களாம். எனவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலும், கார்த்தி விருமன் படத்திலும் பிசியாக இருப்பதால் இந்த படங்களை முடித்த பின்னர் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்