fbpx
Connect with us

கார்த்தியின் கைதி இந்த அமெரிக்க படத்தின் தழுவலா.. ஒரு அலசல் ரிப்போர்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தியின் கைதி இந்த அமெரிக்க படத்தின் தழுவலா.. ஒரு அலசல் ரிப்போர்ட்

லோகேஷ் கனகராஜ் – முதல் படம் மாநகரம் ஹிட். இரண்டாவது படம் கைதி, அதன் ரிலீசுக்கு முன்பே மூன்றாவது பட வாய்ப்பு அமைந்தது; அதுவும் தளபதி விஜய்யுடன். அந்தளவுக்கு இவர் திறமை மீது நமபிக்கை உள்ளது என்றால் கட்டாயம் மனிதர் வேற லெவல் தான் என்பதில் சந்தேகமில்லை.

கைதி படம் உருவானதை பற்றி பல முறை கூறியுள்ளார் இயக்குனர். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் பாணரில் தான் இரண்டாவது படம் பண்ண கதை எழுதி இருக்கிறார். எனினும் அதிக பட்ஜெட் ஸ்க்ரிப்டுக்கு தேவை படவே அடுத்த கதையை நோக்கி சென்றுள்ளார். பின்னர் அவர் உருவாக்கியது தான் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானர், ஹீரோயின் இல்லாத கதையாம். முதலில் மன்சூர் அலி கான் அவர்களை மனதில் வைத்து தான் ரெடி செய்துள்ளார். எஸ் ஆர் பிரபு, கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என கூற, இயக்குனரும் அவரை சந்தித்து கதையை சொல்ல, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பின் தான் இந்த ப்ரொஜெக்ட் இந்தளவு பிரம்மாண்டமாக டேக் ஆப் ஆனது. இன்று வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அடுத்த பார்ட் எப்போ என அனைவரும் கேட்கும் சூழலில் உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பத்திரிகையாளர் சந்திப்பில் ப்ருஸ் வில்லிஸ் நடிப்பில் வெளியான டை ஹார்ட் படம் தான் இன்ஸபிரேஷன் என சொன்னார் இயக்குனர்.

அதுமட்டுமன்றி செய்தித்தாளில் படைத்த ஒரு நியூஸ் வைத்து தான் படத்தை ரெடி செய்தார் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சினிமாபேட்டை பார்வையில் இப்படம் சில பல வற்றின் கலவை என்றே தோன்றுகிறது.

செக்யூரிட்டி – 2017 இல் வெளியான அமெரிக்க ஆக்ஷன் திரைப்படம். netflix சில் ஒளிபரப்பானது. ஆண்டனியோ பண்டாரிஸ் மற்றும் பென் கிங்ஸ்லி முக்கிய வேடத்தில் நடித்த படம்.

ஹீரோ மிலிட்டரியில் கேப்டன் கேடரில் இருந்து திரும்பியவர். இங்கு அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. மேலும் அவரது மனைவி மற்றும் மகளை பிரியும் சூழலும் ஏற்படுகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமான மால் ஒன்றில் செக்யூரிட்டி வேலை கிடைக்கிறது. அங்கு இன்ச்சார்ஜ் மற்றும் உடன் பனி புரிபவர்கள் என மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளனர்.

முக்கிய கேசில் சாட்சியாக இருக்கும் பெண்ணை போலீசை அழித்து பிடிக்க வருகிறது ஒரு கும்பல். அவள் தப்பித்து வந்து இந்த மாலில் தஞ்சம் புகுகிறாள். இந்த ஐவரும் சேர்ந்து எவ்வாறு மால் உள்ளே அவர்களை வரவிடாமல் தடுக்கின்றனர், தன் மகளை போலவே உள்ள அவளை எவ்வாறு காக்க முயல்கிறான் ஹீரோ. யார் அதில் இறக்க நேரிட்டது என்பது தான் மீதி கதை.

security 2017 movie

சினிமாபேட்டை அலசல் – நேரடியாக பார்த்தால் கைதி மற்றும் செக்யூரிட்டி ஒன்றாக தோன்றாது. ஆனால் சிந்தித்து பார்த்தால் இரண்டும் ஒன்று தான். கதையும் திரைக்கதையும் உல்ட்டா செய்தால் செக்யூரிட்டி கைதி ஆகிறான் என்பதே உண்மை.

அங்கு மிலிட்டரி இங்கு கைதி, ஆனால் மகள் செண்டிமெண்ட் உள்ளது.

ஊருக்கு ஒதுக்கப்புறமான கட்டிடம் அங்கு ஷாப்பிங் மால் இங்கு கமிஷனர் ஆபீஸ்.

அங்கு மாலில் உள்ள செக்யூரிட்டி இங்கு காலேஜ் மாணவர்கள்.

அங்கு சிபிஐ சாட்சி இங்கு போதைப்பொருள் என அடுக்கிக்கொண்டே போகலாம்..

சினிமாபேட்டை வெர்டிக்ட் – தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top