Tamil Cinema News | சினிமா செய்திகள்
43 வயதில் தலை நரைத்து வயதான தோற்றத்தில் வெளியான கார்த்தி புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகரான கார்த்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் கார்த்தியின் கதை தேர்வில் வித்தியாசம் இருக்கும். இதனாலேயே கார்த்தி படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதைப்போல் ஒரே மாதிரி கதையில் தொடர்ந்து படங்கள் செய்ய மாட்டார் என்பதே இவருடைய வெற்றிக்கு காரணம்.
இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் சுல்தான். கார்த்தியுடன் முதல் முறையாக ரஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.
பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் ஆக உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் டீஸர் வருகின்ற புத்தாண்டுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் சுல்தான் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கார்த்தியின் அண்ணன் சூர்யா, 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் சமீபகாலமாக படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவர் தயாரித்திருக்கும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

karthi-cinemapettai
இந்த படத்தின் தொடக்க விழாவுக்கு வந்த கார்த்தியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். 43 வயதில் தலை நரைத்து வயதான தோற்றத்தில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்தி அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் கெட்டப்பாக இருக்கலாம் என்கிறார்கள்.

karthi-cinemapettai-01
