Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்தி நடிக்கும் k-17 தேவ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சூர்யா வெளியிட்டார்.! போஸ்டர் உள்ளே
நடிகர் கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம். என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறகு தற்போது ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் k17 தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர் Reliance entertainment தயாரித்து வருகிறார்கள், படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைத்து வருகிறார்.
Super happy to launch Thambi @Karthi_Offl ‘s ? #DevFirstLook#Dev @RajathDir @RakulPreet@Jharrisjayaraj @VelrajR@lakku76 @PrincePictures_ @RelianceEnt@TagoreMadhu@LightHouseMMLLP All the best team!!! ??? pic.twitter.com/kD7DP5Nq0w
— Suriya Sivakumar (@Suriya_offl) October 25, 2018
இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கே கார்த்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார் அதேபோல் தற்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்.
இந்த பர்ஸ்ட் லுக்கில் கார்த்தி ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் பக்கத்தில் கையில் ஹெல்மெட்டுடன் நிற்கிறார் படத்தின் கதை மதுரை சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்த பைக்கில் இருக்கும் எண் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் பதிவிடப் பட்டுள்ளது.
