Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாவது முறையாக முரட்டு இயக்குனருடன் கூட்டு சேர்ந்த கார்த்தி.. தெறிக்கவிடப் போகும் அடுத்த படம்
பெரும்பாலும் கார்த்தி இதுவரை பணியாற்றிய இயக்குனர்களுடன் இரண்டாவது முறையாக பணியாற்ற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை குறிப்பிட்ட இயக்குனருடன் இரண்டாவது முறையாக களமிறங்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பிரபல நடிகர் சூர்யாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிய நிலையில் வெறும் 20 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
கார்த்தியின் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளதும். இவருடைய சினிமா கேரியரில் தோல்வி படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான்.
சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் அபார வசூல் குவித்து வருவதால் அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே கார்த்திக்கை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த கொம்பன் முத்தையா இயக்கத்தில் மீண்டும் ஒரு கிராமத்து படத்தில் நடிக்க உள்ளாராம் கார்த்தி.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த அதே சமயத்தில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் மிகவும் உருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் குடும்ப செண்டிமென்ட் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கார்த்தி நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான அதிரடி அப்டேட்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என தெரிகிறது.
