Videos | வீடியோக்கள்
கார்த்தி உண்மையான தம்பி இல்லையா? டிவிஸ்ட் வைக்கும் தம்பி ட்ரெய்லர்
Published on
நடிகர் கார்த்தி கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தம்பி. இந்த படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தை பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். அக்கா தம்பி இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என தெரிகிறது.
டிரைலரில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் உள்ளன. இந்த படத்தை சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் மூலம் சொந்தமாக தயாரித்துள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது.
