Connect with us

100 தல ராவணன்.. கலக்கலாக வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்

karthi

Videos | வீடியோக்கள்

100 தல ராவணன்.. கலக்கலாக வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்

கைதி படத்திற்குப் பிறகு கார்த்தி மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் கார்த்தியின் முதல் 100 கோடி படமாகவும் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெளிவந்த தம்பி படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கார்த்தி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் சுல்தான்.

ரெமோ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் சுல்தான். இந்த படத்தை கார்த்தியின் உறவினரான எஸ்ஆர் பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் ரஷ்மிகா மந்தனா. அவரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுல்தான் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டீசர் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பான நிலையில் தற்போது சுல்தான் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூலை சுல்தான் படம் குவிக்கும் என்பதை டிரைலரே உணர்த்துகிறது. இருந்தாலும் அதிகமாக ஆசைப்படக் கூடாது என தியேட்டர்காரர்கள் அடக்கி வாசிக்கிறார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top