கார்த்தியின் சுல்தான் விமர்சனம்.. சிறப்பான தரமான சம்பவம் என கொண்டாடும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கார்த்தி நடிப்பில் வந்திருக்கும் சுல்தான். இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

sulthan-review-01
sulthan-review-01

இவர் ஏற்கனவே ரெமோ என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அதுமட்டுமில்லாமல் முதன்முதலாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார்.

sulthan-review-02
sulthan-review-02

பக்கா கமர்சியல் படமாக வெளிவந்திருக்கும் கார்த்தியின் சுல்தான் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் பக்கா மாஸாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

sulthan-review-03
sulthan-review-03

அதிலும் குறிப்பாக பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா மிரட்டி விட்டதாகவும், இடைவேளை காட்சியில் வரும் சண்டை காட்சி இதுவரை இல்லாத அளவிற்கு செம மாஸ் காட்டியுள்ளதாகும் டுவிட்டரில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

sulthan-review-04
sulthan-review-04

குடும்பத்துடன் பார்த்து கொண்டாடப்படும் படமாக கண்டிப்பாக சுல்தான் இருக்கும் என கார்த்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடுநிலை ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

sulthan-review-05
sulthan-review-05

மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த அடுத்த படமாக கண்டிப்பாக சுல்தான் இருக்கும் என இப்போதே டிரேடிங் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. மேலும் இரண்டாம் பாகத்தை விதம் முதல் பாகம் சிறப்பாக இருப்பதாகவும் சிலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்