படம் மொக்க டா, தெலுங்கு படம்டா.. சரிதான் போங்கடா என மூன்று நாளில் வசூலை வாரிக்குவித்த சுல்தான்

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டுவதற்காகவே மூவி ரிவ்யூ என்ற பெயரில் பல பேருடைய உழைப்பை சீரழித்து வருகின்றனர். இது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமல்லாமல் சின்ன சின்ன படங்களுக்கும் மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் சமீப காலமாக இந்த நிலைமை மாறி இருக்கிறது என்றே சொல்லலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது மாஸ்டர் தான். மாஸ்டர் படம் வெளியானபோது இணையதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் தியேட்டரில் மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமாக வந்தது.

அதே போல் தான் கடந்த வாரம் கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படம் வெளியானது. படம் பக்கா தெலுங்கு மெட்டீரியல் எனவும், போரடிக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் மூவி ரிவியூவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அது சாதாரண மக்களிடம் எடுபடவில்லை.

நெகட்டிவ் விமர்சனங்களால் துவண்டுபோன படக்குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் தியேட்டருக்கு பெண்கள் கூட்டமும் குழந்தைகள் கூட்டமும் குடும்பத்தினருடன் படையெடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் கார்த்தியின் கேரியரில் சுல்தான் படம் தான் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை குவித்துள்ளது. மூன்று நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் 25 கோடி வசூலை தாண்டி விட்டதாம்.

இனி வரும் நாட்களில் படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூல் செய்யும் எனவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கார்த்தியின் சுல்தான் படத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அதிகமாக வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

sulthan-cinemapettai-01
sulthan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்