Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்தியை சோதிக்கும் புதிய படம்.. எதைத் தொட்டாலும் தடங்கலாக இருந்தா எப்படிப்பா!
கார்த்தி நடிப்பில் ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்று தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. பொங்கல் ரிலீஸில் இருந்தும் விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிப்பில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது.
மேலும் கார்த்திக் படத்திற்கு முதல் முறையாக விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மேலும் முதல் முறையாக கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ரஷ்மிகா மந்தனாவுக்கு இதுதான் முதல் தமிழ்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் கிறிஸ்மஸ் பண்டிகையை குறிவைத்த சுல்தான் திரைப்படம் அடுத்ததாக பொங்கல் வெளியீட்டை எதிர்பார்த்தது. தற்போது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வருவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் நிலவி உள்ளதாக தெரிகிறது.
இதனால் ஒரேடியாக மாஸ்டர் படத்தை தமிழ் புத்தாண்டுக்கு ஏப்ரல் மாதம் வரை தள்ளி வைத்து விட்டதாக தெரிகிறது. ரஷ்மிகா மந்தனா சுல்தான் படத்தின் மூலம் பிரபலமாகி பல தமிழ் பட வாய்ப்புகளை அள்ளிக் குவிக்கலாம் என்று கனவில் இருந்து கொண்டிருக்கிறார்.
அனைத்திலும் மண் அள்ளி போடும் விதமாக சுல்தான் படம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்வது படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் கார்த்திக்கும் சிறிது சங்கடத்தை கொடுத்துள்ளதாம். ஆனால் எப்போது வந்தாலும் படம் சூப்பர்ஹிட் என்பதைப்போல உருவாகியுள்ளதால் தைரியமாக பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்குகிறார்களாம்.

sultan-cinemapettai
மேலும் OTTயில் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
