Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் கலக்கி எடுத்த கைதி.. சொன்னதைப் போலவே இறங்கி அடித்த கார்த்திக்
நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. தந்தை-மகள் இடையேயான பாசப் போராட்டத்தை கதையின் கருவாக கொண்டு முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை அமைத்து ஆக்சன் அவதாரத்தில் வெளிவந்த திரைப்படம் கைதி.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக சென்ற காரணத்தால் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு கைதி இருக்கும் தியேட்டருக்கு அழைத்து வர வைத்தது. இதன் விளைவு உலகம் முழுவதும் கைது திரைப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.
படம் வெளியான ஒரே வாரத்தில் இவ்வளவு வசூல் பெறுவது கார்த்தியின் சினிமா வரலாற்றிலேயே இது முதல் முறையாகும். பருத்தி வீரன் திரைப்படத்திற்கு பிறகு லோக்கலாக இறங்கி அடித்த கார்த்திக், கைதி இரண்டாம் பாகம் எப்போது என ஆர்வமாக இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் அதற்கான திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கூடிய சீக்கிரம் கைதி-2 வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி-64 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
