Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைதி 2 படத்தின் மிரட்டலான கதை.. ஒவ்வொரு நிமிடமும் மிரளும் காட்சிகள்
கார்த்தி நடிப்பில் தீபாவளியன்று வெளியான கைதி திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்துடன் வசூலில் வேட்டையாடியது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ், கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இணையதளத்தில் கைதி-2 படத்தின் கதை வெளியாகி படக்குழுவை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. முதல் பாகத்தில் கிளைமாக்ஸில் ஹரிஷ் உத்தமனுக்கு, டில்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து ஏற்கனவே கார்த்தியை பற்றி தெரிந்தது போல் படத்தை முடித்திருப்பார்கள்.
அதிலிருந்து இரண்டாம் பாகம் தொடருகிறது. ஹரிஷ் உத்தமன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து ரவுடி தொழில் செய்து வந்துள்ளனர். இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக விஜி என்ற பெண்ணுக்கு கார்த்தி உதவி செய்கையில், டில்லி மீது விஜிக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை டில்லியிடம் கூற, தான் ரவுடி என்பதால் குடும்ப வாழ்க்கை செட் ஆகாது என்பதற்காக அவரை விட்டு விலகுகிறார்.
ஒரு கட்டத்தில் விஜியின் மேல் ஏற்பட்ட தீரா அன்பினால் காதல் வயப்படுகிறார். பிறகு தானாகவே ரவுடி தொழிலை விட்டு விட்டு விஜியை திருமணம் செய்துகொண்டு பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்கிறார்.
திடீரென ஒரு பெரிய வேலை வர ஹரிஷ் உத்தமன், டில்லி இல்லாமல் இந்த காரியத்தை செய்ய இயலாது என எண்ணி அவரிடம் உதவி கேட்டுச் செல்கிறார். டில்லி உதவி செய்ய மறுக்கவே அவர் மீது கோபம் கொள்கிறார் ஹரிஷ். இதற்கிடையில் விஜி கர்ப்பமாகிறாள். டில்லி மீது இருந்த கோபத்தாலும், ஏற்கனவே தடைபட்ட காரியத்தை டில்லியை வைத்து செய்ய வைப்பதற்காக விஜியை கடத்திச் செல்லும்போது, டில்லி ரவுடிகளை அடித்து கொன்று விட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று விடுவார்.
அதன்பிறகு பிளாட்பார மக்களினால் விஜிக்கு குழந்தை பிறக்கிறது, பெண் குழந்தையை பெற்றவுடன் உயிரிழந்து விடுவாள். பிளாட்பார மக்கள் குழந்தையை பற்றிய செய்தியை டில்லியிடம் சொல்ல சிறைக்கு செல்ல, அங்கே அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி குழந்தையை ஆசிரமத்தில் சேர்த்து விடுவார்கள். இதற்கிடையில் ஹரிஷ் உத்தமன் வேறு ஒரு தவறு செய்யும்போது போலீஸாரிடம் மாட்டி, கார்த்தி இருக்கும் அதே சிறைக்கு வருவார். உள்ளேயே இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு டில்லியை அழைத்துச் செல்லும்போது அங்கே வந்த பிளாட்பாரவாசிகள், மனைவி இறந்ததையும் குழந்தை இருப்பதை பற்றிய செய்தியையும் தெரிவிக்கின்றனர்.
இதனால் எப்படியாவது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் கார்த்திக்கு, அதிர்ஷ்டவசமாக தண்டனை காலம் பத்து வருடமாக குறைக்கப்படுகிறது. ஜெயிலில் வேலை பார்த்து சேர்த்த காசில் குழந்தைக்காக கம்மல் ஒன்றை வாங்கிக்கொண்டு வருவார்.
தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிறகு நடக்கும் கதைதான் முதல் பாகத்தில் காட்டப்பட்டது. முதல் பாகத்திற்கு பிறகு குழந்தையுடன் சேர்ந்து தீனாவின் காமாட்சி கேட்டரிங்கில் வேலை செய்கிறார். ஜெயிலில் இருந்து தப்பித்து வரும் ஹரிஷ் உத்தமன், போதைப் பொருள் கடத்தலை தடுத்த நரேனையும், கார்த்தியையும் பழிவாங்க துடிக்கிறார்கள். அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை விறுவிறுப்புடன் கூடிய திரைக்கதை அமைத்து கூறியிருக்கிறார் லோகேஷ்.
முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் ஹீரோயின்கள், பாடல்கள் கிடையாது என்பது உறுதி.
நன்றி
சூர்யாகரன்
