fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட கோடிகளில் நிதி உதவி செய்த கார்த்தி.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட கோடிகளில் நிதி உதவி செய்த கார்த்தி.!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள தியாகராஜநகர் அபிபுல்லா சாலையில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள் இன்னும் முடிக்கவில்லை என.

இந்த கட்டிடம் கிட்டத்தட்ட நாலு மாடிகளை கொண்ட கட்டிடங்களாகவும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, மேலும் இந்த கட்டிடத்திற்குள் ஆயிரம் பேர் அமரும் வகையில், கல்யாண மண்டபம் மற்றும் அலுவலகம் உடற்பயிற்சி செய்யும் கூடாரம் என அனைத்தும் அமைய இருக்கிறது.

இதுவரை இந்த கட்டிடம் கட்டுவதற்கு 30 கோடிக்கு மேல் ஆகிவிட்டது அதனால் இன்னும் கட்டுமான பணிக்கு பணம் தேவைப்படுவதால், நடிகர் கார்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் செய்துள்ளார் மேலும் விஷால் 25 லட்சம் வழங்கியுள்ளார், இன்னும் கூடிய விரைவில் இந்த கட்டிடத்தின் முழு பணியும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top