Meiyazhagan Teaser: சூர்யா, ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் தான் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
அதை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தியான இன்று இப்படத்தின் டீசர் சர்ப்ரைஸாக வெளிவந்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே கதை தஞ்சாவூர் கதைக்களம் என காட்டப்படுகிறது. தஞ்சாவூர் நீடாமங்கலத்திற்கு ஒரு திருமண விழாவிற்காக அரவிந்த்சாமி வருகிறார்.
அவரை அங்கு பார்த்து பாசத்தை கொட்டும் கார்த்தி அத்தான் அத்தான் என சுற்றி சுற்றி வருகிறார். ஆரம்பத்தில் பாசத்தில் நெகிழ்ந்து போகும் அரவிந்த்சாமி போகப்போக அது கழுத்தை நெறிக்க ஆரம்பிப்பதில் கடுப்பாகிறார்.
மெய்யழகன் டீசர் எப்படி இருக்கு.?
கார்த்தி தஞ்சாவூர் வட்டார பேச்சை அசால்டாக பேசி கலக்குகிறார். அத்தான் நிறைய காசு வச்சிருக்காருடியே. ஆத்திரம் அவசரம்னா கேட்கலாம் போலடியே என அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிக்கும் வகையில் இருக்கிறது.
அதேபோல் அரவிந்த் சாமியிடம் பீர் அடிப்பீங்களா என ஆரம்பித்து கடைசியாக டீக்கடைக்கு செல்வது வரை ஒரே அளப்பறை தான். இறுதியாக அரவிந்த்சாமி நான் உன்கிட்ட நாட்டு பால் டீ கேட்டனா என கோபப்படுவதோடு டீசர் முடிகிறது.
இப்படி திரும்பத் திரும்ப பார்க்கும் வகையில் இருக்கும் இந்த டீசர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் டிரைலரை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் நிச்சியம் இப்படம் கார்த்திக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அரவிந்த்சாமி கார்த்தியின் மெய்யழகன்
- லெட்டர் அனுப்பிய கார்த்தி, கிழித்தெறிந்த லைலாவின் அப்பா
- தீபாவளி ரேசில் குதித்த 3 படங்கள்
- கார்த்தியுடன் கிராமத்து கெட்டப்பில் அரவிந்த்சாமி