Karthi : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் மாடு மற்றும் பன்னி ஆகியவற்றின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
மேலும் இந்த மாமிச கொளுப்பினால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தில் வரும் லட்டு காமெடி பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்திக்கு சிரித்து கொண்டு இது ரொம்ப சென்சிட்டிவான விவகாரம் லட்டே தனக்கு வேண்டாம் என்று நக்கலாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் திரை பிரபலங்கள் லட்டை வைத்து காமெடி செய்து வருவதாக தனது வேதனையாக கூறினார்.
முந்தியடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்ட கார்த்தி
சனாதான தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிங்கள் என்றும் பவன் கல்யாண் வலியுறுத்தி இருந்தார். இதற்கு உடனடியாகவே கார்த்தி தனது ட்விட்டர் தளத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தார்.
ஆனால் பவன் கல்யாண் கார்த்தியை குறிப்பிட்டு இந்த பதிவை சொல்லவில்லை. பிரகாஷ்ராஜ் திருப்பதி லட்டு குறித்து பேசியதற்கு தான் பவர் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரகாஷ்ராஜ் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
நான் பேசியதை தவறாக பவன் கல்யாண் புரிந்து கொண்டதாக மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவு போட்டிருக்கிறார். வேலியில போற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக பிரகாஷ்ராஜுக்கு போட்ட வலையில் கார்த்தி சிக்கி இருக்கிறார்.
பெரும் சர்ச்சையான திருப்பதி பிரசாதம்
- திருப்பதி லட்டு போய் பழனி பஞ்சாமிர்தமா.?
- மூரோனாக்கு கைதட்ட சொன்ன மாதிரி லட்டுக்கு செய்யும் பரிகாரம்
- பீப் கிடைக்கல திருப்பதி லட்டு போட்டு செஞ்சேன், வைரல் மீம்ஸ்