Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்தி, ராஷ்மிகா நடித்த சுல்தான் படத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்.. பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர்
கைதி படத்திற்குப் பிறகு கார்த்தி மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் கார்த்தியின் முதல் 100 கோடி படமாகவும் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெளிவந்த தம்பி படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கார்த்தி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் சுல்தான்.
ரெமோ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் சுல்தான்.
இந்த படத்தை கார்த்தியின் உறவினரான எஸ்ஆர் பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் ரஷ்மிகா மந்தனா. அவரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sultan-shooting-wrap-cinemapettai
சுல்தான் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் பொங்கலுக்கு படத்தை வெளிக் கொண்டுவர திட்டம் போட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
