Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனை ரவுண்டு கட்டும் நடிகர்கள்.. எதிர் நீச்சல் போட்டு அவங்க கதையை முடிப்பாரா?
தமிழ் சினிமாவில் எப்போதுமே போட்டி பொறாமைகள் சற்று அதிகமாகவே உண்டு. காரணம் இந்த வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தில் மட்டுமே தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்ற கர்வம் தான்.
ஆனால் தற்போது சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நடிகர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். மக்களும் அவர்களை ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், பக்கா என்டர்டைன்மென்ட் ஹீரோவாக வலம் வர ஆரம்பித்து விட்டார். இதனால் வாரிசு நடிகர்கள் சிலரின் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இதனால் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய உடன் எப்படியாவது சிவகார்த்திகேயனை சினிமாவை விட்டு துரத்தி விட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் அவர்களின் நல்ல எண்ணங்களுக்கு முன்னால் நம்ம வீட்டு பிள்ளை எனும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது. அதனால் இந்த வாட்டி விட்டதை பிடிக்க வேண்டும் என டிசம்பர் மாதம் வெளியாக உள்ள ஹீரோ படத்திற்கு போட்டியாக ஜீவா நடிக்கும் சீறு மற்றும் கார்த்தி நடிப்பில் தம்பி போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன.
இந்தக் கடும் போட்டியை சமாளித்து நம்பர் 1 இடத்தை சிவகார்த்திகேயன் பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது மக்கள் தரப்பு.
