என்ன தான் சினிமாவில் நடிகர்கள் பல வித்தியாசமான ரோல்களில் நடித்தாலும் அவர்கள் கம்பீரமான ரோலாக கருதுவது என்னமோ போலீஸ் ரோல் தான். எம்ஜிஆர்., சிவாஜி தொடங்கி இன்றைக்கு உள்ள சிம்பு வரை பல நடிகர்களும் போலீஸ் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

அப்படி நடித்த போலீஸ் ரோல் படங்கள் அவர்களுக்கு பெயரையும், வெற்றியையும் பெற்று தந்துள்ளன. நடிகர் கார்த்தியும், சிறுத்தை என்ற படத்தில் கம்பீரமான போலீஸ் ரோலில் நடித்திருந்தார். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. தற்போது இந்தப்படத்திற்கு “தீரன் அதிகாரம் ஒன்று” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக ராகுல் பீரித்தி சிங் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில், ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R. பிரகாஷ்பாபு மற்றும் S.R.பிரபு தயாரிக்கிறார்கள்.