கஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதைதொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவர் மீண்டும் ஒருமுறை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டில் வெளியான சிறுத்தை படத்தில் கார்த்தி போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.