ரஷ்யாவில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ் படம்.. புதிய சாதனை படைத்த லோகேஷ்

தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றியடைந்த சில திரைப்படங்கள் இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் ரிலீஸாவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் முக்கியமாக சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே தற்போது சினிமாவில் முதல்முறையாக நடிகர் கார்த்தியின் திரைப்படம் ரஷ்யாவில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது.

2019ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தது. கைதி திரைப்படத்திற்கு முதல் ஆப்ஷனாக நடிகர் மன்சூர் அலிகானை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்திருந்தார். பிறகு கைதி திரைப்படத்தின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கார்த்தியை நடிக்க வையுங்கள் என்று லோகேஷ் கனகராஜிடம் கூறியதை அடுத்து அரைமனதோடு கார்த்தியை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

போதை கடத்தல் ஈடுபட்ட கும்பலிடமிருந்து காவலர்களை காப்பாற்றும் சிறையிலிருந்து வெளிவந்த கைதியாக நடிகர் கார்த்தி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். முழுக்க முழுக்க இரவு நேரங்களில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு காட்சிகளும் இன்றுவரை ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இதனிடையே இத்திரைப்படம் வெளியாகி இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் 32 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் வாழ்க்கை தளபதி விஜய், உலகநாயகன் கமலஹாசன் என பயணம் ஆகிக் கொண்டிருக்கிறார். அதேபோல நடிகர் கார்த்தியின் திரைப்படங்களும் வரிசையாக வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே தற்போது ரஷ்யாவில் கைதி திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு உஸ்னிக் என்ற பெயரில் கிட்டத்தட்ட 121 மாகாணத்தில் 297 தியேட்டர்களில் இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம ரஷ்ய நாட்டில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் சினிமா தொடர்ந்து தோல்வி படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பேன் இந்தியா திரைப்படங்களை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நம் தமிழ் சினிமாவை மற்ற நாடுகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

Next Story

- Advertisement -