Connect with us
Cinemapettai

Cinemapettai

karthi-22

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வருடம் கழித்து மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்திக்.. இயக்குனரை நினைச்சாதான் பக்குனு இருக்கு

கார்த்திக் 22-வது படத்தை இயக்க போவது யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 2018-ல் விஷால் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் தான் இயக்க உள்ளாராம்.

பி எஸ் மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த வருடம் ஹீரோ என்ற படத்தை எடுத்து படுதோல்வியடைந்தது. ஆனாலும் கார்த்திக் கதை களத்தை தேர்வு செய்வதில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் சிறுத்தை, காஷ்மோரா படத்திற்கு அடுத்தபடியாக இரட்டை வேடத்தில் கார்த்திக் நடிக்க உள்ளாராம். காமெடி மட்டும் வெறித்தனமான ஆக்ஷன் கலந்த சிறுத்தை படத்திற்காக ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இரும்புத்திரை போன்று 100 நாட்கள் வெற்றியை கண்ட பி எஸ் மித்ரன் தோல்வியை சந்தித்தாலும், இந்தப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் கதை திரில்லர் கலந்த சமூக குற்றங்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இருக்குமாம். கார்த்திக் தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக மித்திரன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top