Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது.! அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.!
நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தேவ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் இது திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேவ் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளார்கள் தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் 14ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் என அறிவித்துள்ளார்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாக இருக்கும் இந்த பாட்டிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தின் பூஜை நேற்று தொடங்கி துவங்கியுள்ளது, கார்த்தி நடிக்கும் 18 வது படமாகும் இது இந்த படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார், மேலும் இந்த படத்தில் நாயகி இல்லையாம் இது முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என கூறியுள்ளார்கள், ஒரே நேரத்தில் இரண்டு படத்தின் அறிவிப்பு வெளியானதால் கார்த்தி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
