Tamil Cinema News | சினிமா செய்திகள்
50 வருடங்களில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த தல.! சும்மா கெத்தா இருக்கா.!

50 வருடங்களில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த தல.! சும்மா கெத்தா இருக்கா.!
கடந்த பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஸ்வாசம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு “ஜகமல்லா” என்ற பெயரில் இந்த மாதம் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
கர்நாடகாவில் அனைத்து மொழி திரைப்படங்களும் ரிலீஸ் ஆகும் ஆனால் தமிழ் படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகது, ஏன் இதுவரை ரஜினி 2.0 படம் கூட டப் செய்யப்பட்டு ரிலீசாகவில்லை, அந்தளவுக்கு அங்கு கிடுக்குப்பிடி இருக்கிறது ஆனால் அதனை உடைக்கும் விதமாக அஜித்தின் விவேகம் திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு “கமாண்டோ” பெயரில் ரிலீஸ் ஆனது.
கடந்த 50 வருடங்களில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை அடைந்தது அதேபோல் படமும் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், ஆகிய திரைப்படங்களும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டானது, தற்போது நான்காவது படமாக விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
