Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களை வாழ்த்தும், சக நடிகர்களின் ரசிகர்கள்.! என்ன செய்தார்கள் தெரியுமா.?
Published on
அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், அஜித் சினிமா நடிகரை தாண்டி நல்ல மனிதரும் கூட இவருடன் பழகிய அனைவருமே இதை தான் சொல்வார்கள்.
இந்த வகையில் அஜித்தைப் போல அஜித் ரசிகர்களும் தற்பொழுது ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்கள், கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்கள் சிலர் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆகவே சிறப்பு வண்டி ஒன்றை வாங்கி, வெளியிட்டுள்ளார்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக இந்த வண்டி என்று அனைவருக்கும் தெரியும் வகையில் மக்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அது மட்டுமில்லாமல் இலவச கல்வி கொடுப்பதற்கும் பல வேலைகளை செய்து வருகிறார்களாம், கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
