திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

கர்ணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? கொட்டும் பண மழையில் நனையும் கலைப்புலி எஸ் தாணு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற கர்ணன் படம் தமிழகமெங்கும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் பக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகியிருந்தது.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் சாதிப் பிரச்சினைகளை தூண்டும் வகையில் கர்ணன் திரைப்படம் அமைந்திருப்பதாக பல கருத்துக்கள் வெளியானது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 21 கோடிக்கு விற்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தற்போது வரை 42 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமேசான் தளத்தில் கர்ணன் திரைப்படம் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். கர்ணன் திரைப்படம் வெளியான முதல்நாள் மட்டும்தான் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு தனுஷ் படம் இவ்வளவு பெரிய வசூலை வாரி குவித்திருப்பது நாளுக்கு நாள் அவரது சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும் இந்த சூழ்நிலையிலும் கர்ணன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளதாம்.

karnan-dhanush-cinemapettai
karnan-dhanush-cinemapettai
Advertisement Amazon Prime Banner

Trending News