Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-karnan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கர்ணன் தெலுங்கு ரிமேக்கில் ஹீரோ யார் தெரியுமா? செட் ஆகாதே என புலம்பும் நெட்டிசன்கள்

தனுஷ் என்ற நடிகன் ஒருபுறம் கமெர்ஷியல் மறுபுறம் அவார்ட் வாங்கும் சினிமா என கலக்கி கோலிவுட்டில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். அசுரன் படத்துக்கு கிடைத்த அங்கீகாரம் நாம் அறிந்த விஷயமே.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தாணு தயாரிப்பில் வெளியானது கர்ணன். மேலும் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம்.

கொடியன்குளம் பக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கர்ணன் திரைப்படம் எடுக்கப்பட்டது. கொரானா கட்டுப்பாடுகள் உள்ள சூழலிலும் இப்படத்தை திரை அரங்கில் ரிலீஸ் செய்தனர். இப்படம் மே 8 அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரிமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளாராம். அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bellamkonda Sai Sreenivas

இந்த சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் பட்சத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் தனக்கென்ற இடத்தை கட்டாயம் பிடித்து விட முடியும்.

Continue Reading
To Top