தனுஷின் கர்ணன் விமர்சனம்.. தரம், மாஸ்டர் பீஸ் எனக் கொண்டாடும் ரசிகர்கள்

மாஸ்டர் மற்றும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. இதையெல்லாம் கர்ணன் பூர்த்தி செய்தாரா என்பதை ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ட்விட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

karnan-review-01
karnan-review-01

தனுஷ் கேரியரில் கர்ணன் படம் தான் பெஸ்ட் எனவும், அசுரன் படத்தையே கர்ணன் படம் தூக்கி சாப்பிட்டுவிட்டது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

karnan-review-02
karnan-review-02

தனுஷ் ரசிகர்களை விட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கர்ணன் படத்தை கொண்டாடுவதுதான் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. மேலும் தனுசுக்கு அடுத்த தேசிய விருது உறுதி எனவும் கூறி வருகின்றனர்.

karnan-review-03
karnan-review-03

படத்தின் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் மிரட்டி விட்டாராம். கண்டிப்பாக கர்ணன் திரைப்படம் அசுரன் படத்தின் வசூல் சாதனைகளை எல்லாம் அசால்டாக முறியடித்து விடும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

karnan-review-04
karnan-review-04

மேலும் பல இடங்களில் கர்ணன் படத்தின் முதல்நாள் முதல்காட்சி காலை 5 மணி முதலே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்