கர்ணன் படத்தில் அடிக்கடி வந்து பயமுறுத்திய சாமி உருவம்.. எதற்காக வருகிறது தெரியுமா.?

dhanush-karnan
dhanush-karnan

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் வெற்றி நடை போட்டு வருகிறது கர்ணன் திரைப்படம். வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வரும் கர்ணன் திரைப்படம் தனுஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தாலும் அதற்கான விளக்கத்தை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். அந்த படத்தில் பயமுறுத்தும் அளவில் ஒரு உருவம் காணப்படுகிறது.

அந்த உருவம் அவ்வப்போது திரையில் காண்பிக்கும் போது பயமாக தான் இருக்கும். எதற்காக இந்த உருவத்தை கொண்டு வருகின்றனர் என்ற காரணம் பல பேருக்கு புதிராக இருந்தது, அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

அதாவது வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு இளம் வயதில் பெண் இறந்து விட்டால், அந்த பெண்ணை கன்னி அம்மனாக அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவார்களாம்.

இந்த கலாச்சார வழிபாடு முறை திருநெல்வேலி மாவட்டத்தில் காலம் காலமாக இருந்து தான் வருகிறது. அந்த வழிபாட்டு முறையை தான் மாரி செல்வராஜ் இந்த படத்தில் தத்துரூபமாக கொண்டு வந்துள்ளார்.

karnan-01
karnan-01

படம் தொடக்கத்திலிருந்து முடிவுவரை கன்னி அம்மனாக வரும் அந்த பொம்மை ரசிகர்களுக்கு ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தி தான் உள்ளது. இப்போதும் அந்த உருவத்தை நாம் கோயில்களில் பார்க்க முடியும். இவ்வளவு நேர்த்தியான காட்சிகளை படமாக்கியுள்ள மாரி செல்வராஜ்க்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி தான் வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner