Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த படத்தை முடிச்சாச்சு, அடுத்தது என்னப்பா? அசுர வேகத்தில் அந்த படத்தை முடித்த தனுஷ்

karnan-dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த படத்தை முடிச்சாச்சு, அடுத்தது என்னப்பா? அசுர வேகத்தில் அந்த படத்தை முடித்த தனுஷ்

தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் பிரபலமடைந்துள்ளவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட், ஹாலிவுட் ஆகிய துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் பாலிவுட், ஹாலிவுட் நடித்தாலும் அவர் அதிகம் கவனம் செலுத்துவது கோலிவுட்டில் தான். அந்த அளவிற்கு அவருடைய திரைப்படங்கள் வசூலையும், பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான பட்டாசு எதிர்பார்த்த அளவிற்கு பெயரை பெற்றுத் தராவிட்டாலும், ஓரளவுக்கு வெற்றியை பெற்று ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்போது இவரது நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஜகமே தந்திரம் படத்திலிருந்து புஜ்ஜி எனும் வீடியோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் இப்படத்தையும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு விருந்தாக மற்றொரு செய்தி கிடைத்துள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கி வந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துக் கொண்டிருந்த நிலையில், இப்படத்தின் வேலைகளை முடித்து விட்டதாக தனுஷ் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படக்குழு அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

dhanush

dhanush

அதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். எது எப்படியோ இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என ஒரு பக்கம் நம்பிக்கை இருந்தாலும், மறு பக்கத்தில் ரசிகர்கள் OTT தளத்தில் வெளியிட்டு விடுவார்களோ என்ற பயத்திலும் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top